Rock Fort Times
Online News

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்:- பாஜக பிரமுகரை தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட திருச்சி வாலிபர் கைது…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாநகர சைபர் கிரைம் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராஜசேகர். இவர் அலுவலகத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திருச்சி, நத்தர்ஷா பள்ளிவாசல் வள்ளுவர் நகர் ஜின்னா தெருவை சேர்ந்த மன்சூர் அலி (வயது 26) என்பவர் பழனிபாபா பெனாடிக் 07 என்ற ஐடியில் இருந்து ஒரு வீடியோ பதிவிட்டார். அந்த வீடியோவில், “தலித் ஹுசைன் ஷா என்பவர் ஜம்மு-காஷ்மீரில் பாஜக கட்சியின் ஐடி பிரிவின் பொறுப்பாளராக உள்ளார். அவர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிற்காக பணியாற்றுகிறார்” என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜசேகர், மாநகர சைபர் கிரைம் போலீசில் ஆள்மாறாட்டம் செய்து பாஜக பிரமுகரின் பெயர் மற்றும் புகைப்படத்தை தவறாக பதிவிட்டு இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையிலும், அரசாங்கத்தின் மீது வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அந்த வீடியோ பதிவு உள்ளது. மேலும், மத அடிப்படையில் பகைமையை உருவாக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கமாகக் கொண்டது என புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், மன்சூர் அலி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்