கரூர், மாயனூர் காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் உடல் பெற்றோர் வருவதற்கு முன்பாக பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோர் வருகைக்கு முன்பு பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். எனவே குளித்தலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் பெற்றோர்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அனுமதி இல்லாமல் பிரேத பரிசோதனை செய்தது தவறுதான், இந்தத் தவறை இனிமேல் செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்து, நான்கு உடல்களையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்து சொந்த ஊருக்கு அரசு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்தனா். இந்தப் போராட்டத்தினால் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது