Rock Fort Times
Online News

மா்ம விலங்கின் நடமாட்டத்தால் மக்கள் பீதி

 

கரூர் மாவட்ட புகழுா் அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆட்டை மர்ம விலங்கு ஒன்று கடித்து விட்டு தப்பி ஓடியது.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பெயரில் மாவட்ட வனச்சரகர் உத்தரவின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவ துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வினை மேற்கொண்டு அங்கேயே முகாமிட்டுள்ளனர். மேலும் குப்பம், அத்திப்பாளையம், முன்னூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் சிறுத்தை புலி வந்திருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.குறிப்பாக நாமக்கல் மாவட்டம் பகுதியில் பல நாட்களாக சுற்றி திாிந்து வந்த சிறுத்தைபுலி தற்போது காவிரி ஆற்றின் வழியாக கரூர் மாவட்ட எல்லையான அத்திப்பாளையம் பகுதிக்கு வந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுத்தை புலி வந்திருக்குமோ என்ற      அச்சத்தில் கரூர் மக்கள் மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்