கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவா் பேசுகையில், இன்று நம் நாட்டு மக்களாட்சியில் நாம் அனைவரும் மன்னர்கள் அதை நாம் முதலில் நினைவு கொள்வோம். ஒரு மன்னர் இப்படி எல்லாம் செய்துள்ளார்கள் என்று திரைவடிவில் முதலில் காட்டி இருக்கிறார்கள். இந்த பழமை பெருமை பேசி நாம் அழிந்து போகக்கூடாது என்று பாரதிதாசன் கூறியுள்ளாா். நம்முடைய தாய் நாடான தமிழ்நாட்டில் உள்ள பண்டைய கால மன்னர் காலத்தில் மக்கள் அனைவரும் நாகரிகத்துடனும் பகுத்தறிவுடனும் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.எனவே இந்நிகழ்ச்சியின் மூலம் நம் மாணவர்களிடம் ஒரு அறிவியல் தேடல்,பகுத்தறிவுக்கான தேடல் கண்டிப்பாக வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அதாவது நம்முடைய தமிழ்நாடு பண்டைய காலத்தில் இருந்து கடந்த நூறு ஆண்டுகளுக்கு உள்ளான வரலாற்றில் பின் தங்கிய நிலையில் கல்வி அறிவு குறைவாக இருக்கக்கூடிய மாநிலம். சீரிய முயற்சியினால் நம்முடைய வாழ்க்கை தரம் எவ்வாறு மேம்பட்டு உள்ளது. சமூக நீதி எவ்வாறு நிலை நாட்டப்பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். மேலும் ஏன் நம் மாநிலம் தனி சிறப்பு வாய்ந்தது, நம் மொழி தனி சிறப்பு வாய்ந்தது என்று நாம் உணர வேண்டும். இதை நான் ஒரு மாவட்ட ஆட்சியராக சொல்லவில்லை. அதாவது நாம் எல்லோரும் மன்னர்கள் நம்ம நாட்டில் யார் வேண்டுமென்றால் படித்தால் இந்த நிலைமைக்கு வர முடியும் யார் வேண்டுமென்றாலும் எந்த பதவிக்கும் வர முடியும். வெற்றியடைய வேண்டும் என்றால் முக்கியமாக இளம் தலைமுறை இளைஞராகிய நீங்கள் இந்த விஷயத்தை உணர வேண்டும். அதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு தூண்டுதலாக இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினாா்.

Prev Post