Rock Fort Times
Online News

கருணாநிதி நினைவு தினம்: திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக நாளை அமைதி பேரணி…* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிக்கை!

திருச்சி தெற்கு மாவட்ட திமுகnசெயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை (ஆகஸ்ட் 7) அமைதி பேரணி நடக்கிறது. காலை 10.30 மணிக்கு அண்ணா ஸ்டேடியம் ரவுண்டானா முதல் டி.வி.எஸ். டோல்கேட் வரை அமைதி பேரணி சென்று அங்குள்ள கருணாநிதி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் சட்ட மன்ற உறுப்பினர், மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை, கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்