Rock Fort Times
Online News

கருணாநிதி நினைவு நாள்: திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அமைதி பேரணி…!

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7 -ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சியில் அமைதி பேரணி நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன் முன்னிலை வகித்தார். திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கிய பேரணி டி.வி.எஸ். டோல்கேட் வரை நடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். டிவிஎஸ் டோல்கேட்டை பேரணி அடைந்ததும் அங்குள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் முன்னிலையில் முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலா வேலு, மூக்கன், பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு தர்மராஜ், ஏ.எம்.ஜி.விஜயகுமார், பாபு, மணிவேல், ராஜ்முகமது , சிவக்குமார், கவுன்சிலர்கள் கீதா, பொற்கொடி, சீதாலட்சுமி, முருகானந்தம், ரமேஷ், சாதிக் பாட்ஷா, கே.கே.கே.கார்த்திக்,எல்.ஐ.சி.சங்கர், செந்தில் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்க உறுதி ஏற்கும் நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளால் 2026-ல் மட்டுமல்ல 2031 தேர்தலிலும் திமுக ஆட்சியை பிடித்து விடும் என்கிற அச்சத்தில் நீதிமன்றத்தை நாடினார்கள். ஆனால் நீதிமன்றம், அரசியலுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது எனக் கூறி வழக்கு தொடுத்தவருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்