Rock Fort Times
Online News

காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா…!

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி, ராஜா, டேனியல் ராய், கனகராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சிக்கல் சண்முகம், சத்தியநாதன், சத்தியமூர்த்தி, பேங்க் முருகேசன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா, உறையூர் எத்திராஜ், அண்ணா சிலை விக்டர், தேவதானம் செந்தமிழ் செல்வன், மலைக்கோட்டை சேகர், சரவணன், சுந்தர், மணிவேல் மாவட்ட செயலாளர்கள் அனந்த பத்மநாபன், ஜீவா நகர் ராஜா, சேவா தள பிரிவு தலைவர் அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி, மீனவர் அணி தனபால், மகளிர் அணி விஜயலட்சுமி, கோகிலா, சந்திரா, பாரதி, ரோஸி பஞ்சாயத்து ராஜ் பிரிவு பழனியாண்டி, ஐ. என்.டி.யு.சி. தொழிலாளர் காங்கிரஸ் முஸ்தபா சம்சுதீன், பட்டதாரி அணி மாநில செயலாளர் செந்தூர் வாசன், எஸ்டி பிரிவு தலைவர் பாக்யராஜ், மற்றும் வார்டு தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்