கரூர், வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான நடிகர் கமல்ஹாசன் இன்று(அக்.6) கரூர் வந்தார். பின்னர் அவர் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Comments are closed.