திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் நடந்த தொடர் திருட்டை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் தங்கும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா். மேலும் அதே பகுதியில் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த சொகுசு காரை பரிசோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 15 மூட்டைகளில் 4 லட்சம் மதிப்பிலான குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வாகனத்தை ஓட்டிவந்த வாலாஜாபாத் ஆறுமுகம் பேட்டை, திருவள்ளூர் தெருவை சோ்ந்த பூபதி என்பவா் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. அதனைத்தொடா்ந்து அவர் மீது காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Next Post