புதுக்கோட்டை மாவட்டம் பெருமநாடு அருகே உள்ள மேட்டுபட்டி பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் யோகேஸ்வரன் (19). கபடி வீரரான யோகேஸ்வரன், பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.இந்தநிலையில் அன்னவாசல் அருகே மாங்குடி பகுதியில் நேற்று (டிச.24) கபடி போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டனா். கபடி போட்டியில் யோகேஸ்வரன் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது யோகேஸ்வரன் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை சக வீரர்கள் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு யோகேஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைகேட்ட அங்கிருந்த சக கபடி வீரர்கள் கதறி துடித்தனா். இதையடுத்து கபடி போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மைதானத்தில் இளம் கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், கபடி வீரர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.