தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலா சாமியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையராக இருந்த பழனி க்குமார் ஓய்வு பெற்றதை அடுத்து பத்திர பதிவுத்துறை செயலாளராக இருந்த ஜோதி நிர்மலாசாமி ஐஏஎஸ் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மிகவும் துணிச்சலான பெண்மணி ஜோதி நிர்மலா சாமி. சப்-கலெக்டராக தன்னுடைய பணியை தொடங்கிய இவர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவராக சிறப்பாக பணியாற்றினார். பத்மநாதபுரம் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த காலத்தில் ஆற்றுப்பகுதிகளுக்கு துணிச்சலுடன் சென்று மணல் கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கினார். அதேபோல பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றினார். இவரது சிறந்த சேவையை பாராட்டி அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி இவருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், பெண்மை ஒரு வரம் உள்பட பல்வேறு நூல்களையும் எழுதி உள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.