Rock Fort Times
Online News

திருச்சி பேருந்து நிலையத்தில் பரபரப்பு : வேளாண்மை அதிகாரியிடம் 3 பவுன் நகை பறிப்பு !

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கலிங்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாம்சன் (வயது43).இவர் இளநிலை உதவியாளராக வேளாண்மை துறையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய துறை ரீதியான பணியை விழுப்புரத்தில் முடித்துவிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். மத்திய பேருந்து நிலையத்திற்குள் அவர் நடந்து வந்து கொண்டிருந்தபோது அவரை ஒரு மர்ம நபர் அழைத்து அவருடன் பேசிக்கொண்டே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் அணிந்திருந்த மூன்று பவுன் நகையை மர்ம ஆசாமி பறித்துச் சென்றுள்ளார். இதையடுத்து சாம்சன் கூச்சலிட்டதால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மர்ம நபரை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்து செயினை பறிமுதல் செய்தனர். இருப்பினும் அந்த மர்ம ஆசாமி பொதுமக்களிடமிருந்து தப்பி ஓடி உள்ளார். இது குறித்து கண்டோன்மென்ட் குற்ற பிரிவு போலீசில் புகார் கொடுத்தாா். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நகையை   திருடி சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்