திருச்சி நவல்பட்டு அருகே உள்ள குண்டூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சோ்ந்தவா் ராஜலக்ஷ்மி (வயது 65). இவர் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு ராமநாதபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் சில தினங்கள் கழித்து வீடு திரும்பிய அவா் , வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்துச் சென்ற 5 பவுன் தங்க நகைகள், ரூ.1000 ரொக்க பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜலட்சுமி நவல்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.