தலைமைத்துவ பயிற்சி மற்றும் தொழில் முனைவோருக்கான உலகளாவிய இயக்கமான, ஜேசிஐ திருச்சி கங்காருவின் 10 ஆம் ஆண்டு பணி ஏற்பு விழா, ஜேசிஐ உறுப்பினர்கள் முன்னிலையில், ஜனவரி 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணிக்கு, திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ரூபி பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இவ்விழாவில் 23 வது மண்டலத்தின் 2024 ஆம் ஆண்டிற்கன மண்டல தலைவர் டாக்டர் ஆர்.ஆர்.அன்பு தனபாலன், முன்னாள் மண்டல தலைவர் ஜேசிஐ செனட்டர் ஜி.வெங்கடேசன், ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெக்ஷ்மி நாராயணன், மண்டல துணைத் தலைவர் எஸ்.ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் 2024 ஆம் ஆண்டிற்கான தலைவராக ஹீட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் வி.ரா.தீபா பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள் மற்றும் இயக்குனர்களும் பதவியேற்று கொண்டனர்.
இந்த நிகழ்வினை ஜேசிஐ திருச்சி கங்காருவின் சாசன தலைவர் மற்றும் கங்காரு கருணை இல்லங்களின் நிறுவனர் சி.ஆர். ராஜா தலைமை ஏற்று நடத்தினார்.
மேலும் இந்த நிகழ்வில்
ஆஸ்க் – என்ற பெயரில் மாணவர்களை நல்ல குடிமகன்களாக உருவாக்குவதற்க்கு தலைமை பண்பு மேன்பாடு பயிற்சிகள் அளித்தல்,
சுற்று சூழலை பாதுகாக்க
என்விரோ திருச்சி – என்ற பெயரில் பல்வேறுப்பட்ட இடங்களில் பல்லுயிரினங்களை வாழும் நாட்டு மரங்களை நட்டு வளர்த்தல்,
சுகாதார திட்டமான
ஆர்.ஆர் டெல்டா – என்ற பெயரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களது குடும்ப உறவினர்களுடன் ஒப்படைத்தல்,
சுயம் நீ – என்ற பெயரில் தொழில் முனைவோருக்கு தலைமை பண்பு , நிர்வாக திறன், சந்தை படுத்துதல் பயிற்சிகள் அளித்தல் போன்ற நான்கு தலைப்புகளுக்கு கீழ் 2024 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட வேண்டிய செயல்திட்டங்கள் என அறிவிக்கப்பட்டு, செயல்படுத்த உறுதி ஏற்கப்பட்டது.
ஞானத்தைப் பெறு…சாதித்து காட்டு… என்ற முழக்கம் 2024 ஆம் ஆண்டிற்கான ஜே.சி.ஐ முழக்கமாக அறிவிக்கப்பட்டது.
இந்த பணியேற்பு நிகழ்விற்குப் பிறகு வணிகர்களுக்கு பெரிதும் பயனுள்ள பி2பி-ஜே காம் வணிக மேசை
கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற்றது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.