திருச்சி கே.கே.நகரின் புதிய அடையாளமாகப்போகும் ஜெயம் எம்பயர்! பூமிபூஜை அன்றே புக்கிங் செய்யப்பட்ட 7 வீடுகள்
175 வீடுகளுடன் உருவாகவுள்ள பிரம்மாண்ட அப்பார்ட்மெண்ட்
திருச்சி சிட்டி லிமிட்டிலேயே பள்ளி, கல்லூரிகள், , வங்கிகள்,மருத்துவமனைகள் , ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட் இவை அனைத்தும் 2லிருந்து 3 கிலோமீட்டர்க்குள் இருப்பது போன்ற பிரைம் லொகேஷனில் அப்பார்ட்மெண்ட் வாங்கி குடியிருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் தான் திருச்சி ஜெயம் பில்டர்ஸ்- ன் ,ஜெயம்ஸ் எம்பயர். திருச்சி கே.கே.நகர் எல்.ஐ.சி காலனி அருகேயுள்ள பாண்டியன் சாலையில் ஜெயம் பில்டர்ஸ் சார்பாக அமையவிருக்கும் ஜெயம் எம்பயர் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பூமி பூஜை விழாவானது இன்று காலை 9 மணி அளவில் நடைபெற்றது.
விழாவிற்கு வந்திருந்தவர்களை ஜெயம் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனரும் கிரடாய் அமைப்பின் மாநில செயலாளருமான இன்ஜினியர் எஸ். ஆனந்த், மற்றும் ஜெயராணி ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.ஐ. வங்கியின் திருச்சி மண்டல துணைப்பொது மேலாளர் நவீன்குமார், திருச்சி எஸ்.பி.ஐ வங்கியின் மண்டல மேலாளர் எஸ்.மதன், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் துணைத்தலைவர் என்.பாலமுரளி கிருஷ்ணன், விக்னேஷ் கல்விக்குழுமங்களின் தலைவர் வி.கோபிநாதன், விக்னேஷ் கல்விக்குழுமங்களின் அறங்காவலர் லட்சுமி பிரபா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வாழ்த்துரை வழங்கினர். இங்கு கட்டப்படவுள்ள அப்பார்ட்மெண்ட்டின் சிறப்பம்சங்கள் குறித்து ஜெயம் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் ஆனந்த் கூறும்போது., தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருப்பது போன்ற அனைத்து வசதிகளுடன், நமது திருச்சியிலும் சர்வதேச தரத்தில் ஒரு கேட்டட் கம்யூனிட்டி அப்பார்ட்மெண்ட் கட்ட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது தற்போது சாத்தியமாகியுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், தியேட்டர், சூப்பர் மார்க்கெட், பேட்மிண்டன் கோர்ட், நீச்சல் குளம், ஜிம், யோகா, பார்ட்டி ஹால், உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மொத்தம் 175 வீடுகளைக் கொண்டதாக இந்த அபார்ட்மெண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளும் வாஸ்து முறைப்படியே அமைக்கப்பட்டுள்ளன. மற்ற அப்பார்ட்மெண்டுகளைப்போல் இல்லாமல், ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி சுவர்களுடன் கட்டப்படுவதுதான் இதன் தனிச்சிறப்பு. கட்டுமானத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் இருப்பதால், நேர்த்தியான வடிவமைப்புடன் தரமான பொருட்களைக்கொண்டு 2 ஆண்டுகளுக்குள் இதை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம். அறிமுகப்படுத்திய இன்றைய தினமே எங்களின் வாடிக்கையாளர்களான திருச்சி வேல்முருகன் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன்,டால்மியா சிமெண்ட்ஸின் முன்னாள் பொது மேலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் நாராயணன் உள்ளிட்ட 7 க்கும் மேற்பட்டோர் தங்களுக்கான அப்பார்ட்மெண்டை புக்கிங் செய்துவிட்டார்கள். அறிமுக சலுகையாக இன்றிலிருந்து வரும் 18ம் தேதி வரை அப்பார்ட்மெண்ட் புக்கிங் செய்பவர்களுக்கு 7 முதல் 10 லட்சம் வரை சேமிப்பதற்கான பல சலுகைகள் உள்ளன. எனவே இந்த அரிய வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார். இந்நிகழ்வில் ஆர்.பி.எஸ் குழுமங்களின் தலைவர் மணி, மொராய்ஸ் சிட்டி நிர்வாக இயக்குனர் லெரோன் மொராய்ஸ் ,கிரடாய் அமைப்பின் திருச்சி தலைவர் ரவி, ஒப்பந்ததாரர்கள் சங்க மாநில தலைவர் திரு சங்கு, கட்டுனர் சங்க மாநில செயலாளர் ராம் பிரபு, பாரத் கன்ஸ்ட்ரக்ஷன் நூர்முகமது, மனோ புரமோட்டர்ஸ் மனோகரன், ரோகினி பில்டர்ஸ் ஆனந்த், அர்ஜித் பிராப்பர்டிஸ் கௌதமன், எம்.கே.பி புரமோட்டர்ஸ் ஷாஜகான், டாக்டர்கள் ஜோஸ் ஜாஸ்பர், வேல்முருகன், உமா, ஜெயந்தி, என்.எல். சியின் பொது மேலாளர் சுப்ரமணியம், மணி கார்ப்பரேஷன் மணி, இந்தர் எலக்ட்ரிகல்ஸ் அசோக், நாகப்பா கார்ப்பரேஷன் நாகப்பன், நவீன் ஏஜென்சிஸ் ஜோசப் ஜெரால்டு உள்ளிட்ட தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெயம் பில்டர்ஸ் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.