Rock Fort Times
Online News

அரசு பள்ளியில் ஜெயலலிதா பிறந்தநாள்: பெண் ஆசிரியை அதிரடி மாற்றம்-5 பேருக்கு நோட்டீஸ்…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் நேதாஜி என்பவர் இனிப்பு வழங்கியுள்ளார். இதுசம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோவை பார்த்த சிலர், இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் பணி நிமித்தமாக திருச்சி சென்றிருந்த நிலையில், உதவி தலைமை ஆசிரியையாக பணியிலிருந்த பெண் ஆசிரியை, பள்ளியில் அரசியல் கட்சியினர் இனிப்பு வழங்க அனுமதியளித்தாராம். இது விதிமுறையை மீறிய செயல் என்பதால் அந்த ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் 5 ஆசிரியர்களுக்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்