பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று ( 08.09.2023 ) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். டப்பிங் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார். அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். சமீபகாலங்களில் ‘எதிர் நீச்சல்’ தொடரில் அவரின் ‘ஏ… இந்தாம்மா’ என்ற சிக்னேச்சர் வசனமும் மீம் மெட்டீரியலாக வலம் வந்துகொண்டிருந்தது. சமீபத்தில், ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். அவரது திடீர் மரணம் திரைஉலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.