திருச்சியில், ரூபாய் 2000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க ஜபில் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், கடந்த 27ம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். அங்கு தொடர்ந்து பல்வேறு நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார். அதன்படி, சான் பிரான்சிஸ்கோவில் ரூ.900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நேரில் சென்ற நிலையில் கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், மூன்று முக்கிய நிறுவனங்களுடன் இன்று(10-09-2024) ஒப்பந்தம் கையெழுத்தானதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்., தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய முதலீடுகள் நிறைவேறி உள்ளன. எலக்ட்ரானிக் உற்பத்தியில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஜபில் நிறுவனம் திருச்சியில் ரூபாய் 2000 கோடியில் புதிய உற்பத்தி ஆலை அமைக்க முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் 5 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும். ஆட்டோமேஷன் நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூபாய் 666 கோடி முதலீட்டில் தனது உற்பத்தியை விரிவுபடுத்த உள்ளது. இதன் மூலம் 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். திறன் இளைஞர்கள் எம்.எஸ்.எம்.இகள் மற்றும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 946
Comments are closed.