Rock Fort Times
Online News

அமைச்சர் எ.வ.வேலுக்கு நெருக்கமான திருச்சி பிரபல பைனான்சியர் வீட்டில் ஐ.டி. ரெய்டு….

தமிழக அமைச்சரவையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் எ.வ.வேலு. இந்நிலையில் திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களில் கடந்த நான்கு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சருக்கு நெருக்கமானவராக கருதப்படும் திருச்சி தென்னூர் அண்ணா நகர் கண்ணதாசன் சாலையில் உள்ள மணப்பாறையை சேர்ந்த பிரபல பைனான்சியர் சாமிநாதன் என்பவரது வீட்டில், இன்று ( 07.11.2023 ) ஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு குழு, சாமிநாதன் மற்றும் அவரது மனைவியை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அவர் கணக்கு வைத்துள்ள வங்கி லாக்கர்களில் தற்போது வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு குழு கண்ணதாசன் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சாமிநாதன் கடந்த 10 வருடத்திற்கு மேலாக பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள பிரபல தொழில் அதிபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாகவும், அமைச்சர் எ.வ. வேலுக்கு நெருக்கமானவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், லட்சுமி காபித்தூள் ஏஜென்சியும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்