Rock Fort Times
Online News

திருச்சியில் வீட்டுக்குள் பிணமாக கிடந்த ஐடி ஊழியர்..!

திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 40). ஐ.டி ஊழியர். இவருக்கு மஞ்சு என்கிற மனைவியும், குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், திண்டிவனத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு தனது குழந்தையுடன் மஞ்சு சென்று விட்டார். வீட்டில் ஹரி கிருஷ்ணன் மட்டும் தனியாக இருந்தார். இந்தநிலையில் அவரது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஹரிகிருஷ்ணன் எப்படி இறந்தார்?, தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பன உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்