Rock Fort Times
Online News

மின் விநியோகத்தில் குறைபாடா?- நிவர்த்தி செய்து கொள்ள தேதி அறிவித்தது மின்சார வாரியம்!

திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சார்ந்த கோட்ட அலுவலகங்களில் பிப்ரவரி மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, 03.02.2026 (முதல் செவ்வாய்கிழமை) துறையூர் கோட்டத்திலும், 06.02.2026 ( முதல் வெள்ளிக்கிழமை) திருச்சி கிழக்கு கோட்டத்திலும், 10.02.2026 (இரண்டாம் செவ்வாய்கிழமை) லால்குடி கோட்டத்திலும், 13.02.2026 (இரண்டாம் வெள்ளிக்கிழமை) ஸ்ரீரங்கம் கோட்டத்திலும், 17.02.2026 (மூன்றாம் செவ்வாய்கிழமை) திருச்சி நகரிய கோட்டத்திலும், 24.02.2026 (நான்காம் செவ்வாய்கிழமை) மணப்பாறை கோட்டத்திலும், 27.02.2026 (நான்காம் வெள்ளிக்கிழமை) முசிறி கோட்டத்திலும் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த நாட்களில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்