Rock Fort Times
Online News

திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா

காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீ மரகதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமா்சையாக துவங்கியது.அதையொட்டி இன்று காலை விஜயராகப் பெருமாள், ஸ்ரீதேவி நாச்சியார் பூமாதேவி நாச்சியாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள பிரமோற்சவ கொடி ஏற்றப்பட்டு பிரம்மோற்சவம் வெகுவிமர்சையாக துவங்கியுள்ளது. பிரம்மோற்சவத்தை யொட்டி இன்று மாலை ஹம்ச வாகனமும் , வெள்ளிக்கிழமை பிரசித்திப்பெற்ற கருட சேவை உற்சவமும், சனிக்கிழமை சேஷ வாகனமும், ஞாயிற்றுக்கிழமை நாச்சியார் திருக்கோளமும்,திங்கட்கிழமை பல்லக்கு உற்சவமும், தீர்த்தவாரி உற்சமும்,வருகின்ற 21ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணி வரை புகழ்பெற்ற திருத்தேர் உற்சவமும் சிறப்பாக நடைபெற உள்ளது.மேலும் நாள்தோறும் காலை, மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எம்பெருமான் எழுந்தருளி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.இந்த பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி அறிவுரையின் பேரில் செயல் அலுவலர் தியாகராஜன், ஆய்வாளர் பிரித்திகா மற்றும் திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் உற்சவர் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்