திருச்சியில் தமிழ்நாடு மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு அலுவலகத்திற்கு கூடுதல் பணியாட்களை நியமிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் மனு கொடுக்கப்பட்டது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான பதிவு செய்யும் அலுவலகம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பணியாளர் மட்டுமே வேலை செய்து வருவதால் மாவட்டம் முழுவதிலும் இருந்து பதிவு செய்ய வரும் ஏராளமான பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பதிவு செய்ய முடியாமலும், பல நாட்கள் அலையும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்களும், அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும் அதிகம் பாதிப்படைகின்றனர். ஆகவே, இதை சரி செய்யும் பொருட்டு பதிவு அலுவலகத்திற்கு கூடுதல் பணியாட்களை உடனடியாக நியமித்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இதில் மாவட்டத் துணைத் தலைவர் அலாவுதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேராசிரியர். மைதீன் அப்துல் காதர், துணைத் தலைவர் நவாப் கான் மற்றும் உறையூர் வல்லல் இப்ராஹிம்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.