இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள காசாவுக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது. அதன்படி, உயிர் காக்கும் மருந்து மற்றும் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு விமானப்படை விமானம் கிளம்பியது. இந்த மருத்துவ பொருட்கள் எகிப்து கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக காசாவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பஷீ வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் வசிக்கும் மக்களுக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது. 6.5 டன் மருந்து மற்றும் 32 டன் பேரிடர் நிவாரண பொருட்களுடன் இந்திய விமானப்படை விமானம் எகிப்தின் அல்ஹரிஷ் விமான நிலையத்திற்கு கிளம்பி உள்ளது. நிவாரண பொருட்களில் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், ஸ்லீப்பிங் பைகள், தார்பாய்கள், சுகாதாரப் பொருட்கள், தண்ணீர் தூய்மைப்படுத்தும் மாத்திரை உள்ளிட்டவை அடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.