Rock Fort Times
Online News

ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: காதலர்கள் எங்கள் கட்சி அலுவலகங்களை அணுகலாம்…* சொல்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம்! 

ஆணவக் கொலைகள்  அதிகரித்து வருவதால் காதலர்கள் எங்கள் கட்சி அலுவலகங்களை அணுகலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில்,  தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை.  ஆணவக்  கொலைகளும் அதிகரித்து வருகின்றன. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன. நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறி செல்கிறது. கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் உள்ளது. அதேசமயம் பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்