கரூரில் கடந்த மே மாதம் 26- தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் தொடர்ந்து 8 நாட்கள் சுமார் 25-க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது வருமானவரித்துறை அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிக்காத இடங்களில் சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமலாக்குத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த மாதம் இரண்டாவது முறையாக வருமானவரித்துறை அதிகாரிகள் 10 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஒரே நாளில் சோதனை நிறைவு பெற்று சென்ற நிலையில், இன்று தனியார் விடுதியில் தங்கி இருக்கும் வருமானவரி அதிகாரிகள் தற்போது சோதனை தொடங்கியுள்ளனர். மூன்றாவது முறையாக வருமானவரித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ள சோதனையானது ராயனூர் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் கொங்கு மணி என்கிற சுப்பிரமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய போலீஸ் பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் சோதனையானது தொடங்கியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.