திருச்சியில் இயங்கும் எடப்பாடி பழனிசாமின் உறவினருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை !
திருச்சி – கல்லணை சாலையில் ஜஸ்கான் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமானது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக வில்சன் மைக்கேல் உள்ளார். இங்கு பைக், மற்றும் கார்களுக்கான லித்தியம் பேட்டரி சோலார் மின் சாதனங்கள் மற்றும் ரயில்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு 6 பேர் அடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான ஈரோட்டை சேர்ந்த ராமலிங்கம்
என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தற்போது திருச்சியில் வருமான வரி துறை சோதனை
நடைபெறும் ஜஸ்கான் எனர்ஜி நிறுவனத்தின் பங்குதாரராக ராமலிங்கம் உள்ளார் என கூறப்படுகிறது. சோதனை குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
Comments are closed.