காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். தொழிலதிபரான இவர், திருச்சி மாம்பழச்சாலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . சுப்பிரமணியனுக்கு திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்து தத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சா.புதூர் பகுதியில் கரியமாணிக்கம் சாலையில் மாருதி சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. தொழிற்சாலையை சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் இருவரும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையில் போலி பில்கள் மூலம் சிமெண்ட் விற்பனை செய்து வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாம்பழச்சாலை பெரியார் நகரில் உள்ள அவரது வீடு மற்றும் சமயபுரம் பகுதியில் உள்ள சிமெண்ட் ஆலையில் 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 11 மணியிலிருந்து 6 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும்(டிச.11) சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறையினருடன் ஜிஎஸ்டி அதிகாரிகளும் இணைந்து சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. சுப்பிரமணியின் சொந்த ஊரான காரைக்குடியில் உள்ள அவரது வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.