திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளறையில் அமைந்துள்ளது, பெருமாள் கோயில். 1300 வருடங்கள் பழமையான இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ். இவர் பட்டப்பகலில் தரிசனத்திற்கு வந்த பெண் பக்தருடன் கோயில் நந்தவனத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியபோது எனக்கு 53 வயதாகிறது. திருமணம் ஆகவில்லை. நான் இதற்கு முன் எந்த தப்பிலும் ஈடுபடவில்லை. இந்த கோவிலில் மூன்றாண்டுகள் பணிபுரிந்து உள்ளேன் என தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் அவரை பணியிட மாற்றம் செய்தார். இந்நிலையில், அவர் தொடர்பான ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், சுரேசை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Comments are closed.