
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 23.35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆவது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வ முத்து மாரியம்மன் கோயில் தெரு பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியைகளையும்,பஞ்சவர்ணஸ்வாமி கோயில் தெருவில் அமைக்கப்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தையும், பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக இன்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் , திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், நகர பொறியாளர் சிவபாதம் மேலும் முக்கிய பிரமுகர்கள், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.