ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் மஸ்தான்வாலி (வயது 43). லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி ஏற்றிக்கொண்டு திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு வந்தார். பின்னர், மார்க்கெட்டில் உள்ள முகமது அலி (55) என்பவரது கடையில் தக்காளி லோடை லாரியிலிருந்து இறக்கி விட்டு அதற்கான தொகை ரூ.1 லட்சத்தை லாரியில் வைத்துவிட்டு சிறிது நேரம் தூங்கி உள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், மஸ்தான் வாலியை தட்டி எழுப்பி கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.