கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 40). இவர் லால்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கரூரிலிருந்து திருச்சி வந்தார். பிறகு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி செல்லும் பேருந்தில் ஏறினார். அப்போது அவர் கையில் ஒரு பை வைத்திருந்தார். பேருந்தில் ஏறிய சில நிமிடங்களில் அந்த பை அவரிடம் இருந்து காணாமல் போய்விட்டது. அந்தப் பையில் 4 பவுன் நகை மற்றும் 8,500 பணம் இருந்தது. இந்த சம்பவம் குறித்து விஜயலட்சுமி கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயலட்சுமியிடம் 4 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.