திருச்சியில் குடிபோதையில் ரகளை – பைக்கில் வந்த 2 வாலிபர்கள் மீது உருட்டுக்கட்டையால் தாக்குதல் ! போலீசார் விசாரணை!
திருச்சி அருகேயுள்ள சர்க்கார் பாளையம் சங்கர் நகரை சேர்ந்தவர் நாகநாதன் .இவரது மகன் யுவராஜ் (வயது 19). இவர் தனது நண்பர் தருண் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி ஓடத்துறை அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த 4 நபர்கள் இவர்களை மறித்து ஏன் வேகமாக செல்கிறீர்கள்? என்று கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மோதலாக மாறியது .இதில் குடி போதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் யுவராஜ், தருண் மீது உருட்டு கட்டையால் தாக்கியதோடு சரமாரியாக கற்களை வீசினர். இதில் பைக்கில் வந்த இளைஞர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து யுவராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed.