Rock Fort Times
Online News

வருகிற சட்டமன்ற தேர்தலில் கோட்டையில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு பாஜக ஆட்சி அமைக்கும்… * முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக திருச்சி மன்னார்புரம் பகுதியில் நேற்று (மார்ச் 23) பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பாஜக மூத்த நிர்வாகியும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில், கோட்டையில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு, பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கும் என்பதற்கு இந்த கூட்டம் போதும். திருச்சியில் கடல் அலைகள் போன்று பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே தலைமை ஏற்க வா என்று நாங்கள் சொல்கிறோம். மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தொகுதி மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துரைமுருகன், டி ஆர்.பாலு ஓரமாக இருந்தனர். இது தான் சமூக நீதியா? இந்தி தெரியாது, அகநானூறு தெரியாது, புறநானூறு தெரியாது . ஆனால் 200 தெரியும். திமுக ஆட்சியை அகற்ற நாங்கள் உறுதி மொழி ஏற்கிறோம். திமுக பொய் பிரசாரம் செய்கிறார்கள். ஒரு குடும்பம் வாழ அனைவரும் ஓடி, ஓடி உழைக்க போகிறீர்களா?இல்லை சாமானிய மக்களுக்கு உதவி செய்யும் பாஜகவுடன் இருக்க போகிறீர்களா? 2026 ம் ஆண்டு திமுக தொண்டர்கள் பாஜகவுடன் இணைந்து பணியாற்றும் சூழ்நிலை உள்ளது. திமுகவில் உண்மையாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயம் கோட்டையை பிடிக்கும். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்