தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று( ஜன. 20) தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் அவை கூடுவது வழக்கம். அதன்படி, சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். தொடர்ந்து, 4-வது ஆண்டாக அவர் வெளியேறியுள்ளார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சியான அதிமுகவும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்றும் தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆளுநர் வெளியேறியது மற்றும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தது போன்றவற்றால் சட்டப்பேரவையில் இன்று பரபரப்பு நிலவியது.

Comments are closed.