Rock Fort Times
Online News

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்… டேவிட்சன் தேவாசீர்வாதம் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமனம்..!

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு எஸ்பியாக அய்மன் ஜமால், ராணிப்பேட்டை எஸ்பியாக சிபின் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தாம்பரம் காவல் ஆணையரக சட்டம்-ஒழுங்கு இணை ஆணையராக ஜெயந்தி, டிஜிபி அலுவலகத்தில் நவீன மயமாக்கல் பிரிவு ஐஜியாக ரயில்வே ஐஜி பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயராமன் சென்னை ஊர்க்காவல் படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் நுட்ப சேவை பிரிவு டிஐஜியாக ஜெயலட்சுமி, ராமநாதபுரம் சரக டிஐஜியாக மணிவண்ணன், திண்டுக்கல் சரக டிஐஜியாக சசி மோகன், கோவை சரக டிஐஜியாக சாமிநாதன், திருச்சி சரக டிஐஜியாக சக்கரவர்த்தி, திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக விஜயலட்சுமி, நெல்லை சரக டிஐஜியாக தேஷ்முக் சேகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்