திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ளது அன்பில். திமுக தலைவரான கலைஞர் கருணாநிதியின் நண்பரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி, தற்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரது சொந்த ஊர். இங்கு திராவிட சிந்தனைகளை தமிழகத்தில் விதைத்து மறைந்த பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி ஆகிய ஐந்து பேருக்கும் மார்பளவு ஐம்பொன் சிலைகளை தனது சொந்த செலவில் அமைக்கவுள்ளார் அன்பில் அருகேயுள்ள ஜெங்கமராஜபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவரான ஜி.வீரமணி. ஐம்பொன் சிலைகள் தயாரிப்புக்கென பெயர் பெற்ற கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் சிலை தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும், திருச்சி சிறுகனூரில் நடைபெறும் திமுக மாநாட்டுக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் விழா நடத்தி சிலை திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.