Rock Fort Times
Online News

மாணவர்களின் கோரிக்கைக்கு உடனடி “ரெஸ்பான்ஸ்”- பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்து அதில் பயணம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி…!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தைப்பார் பேரூராட்சி பகுதியில் இருந்து சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் உள்ள கல்வி நிலையங்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் சென்று கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், அவர்கள் அங்கு சென்று கல்வி பயில போதிய பேருந்து வசதி இன்றி அவதிப்பட்டு வந்தனர். ஆகவே, இப்பகுதியில் இருந்து கூடுதல் பேருந்து வசதி செய்து தரக்கோரி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் மாணவர்கள் மற்றும் கூத்தைப்பார் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துதுறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். அதன்படி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூத்தைப்பார் கிராமத்தில் இருந்து உடனடியாக பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று புதிய பேருந்து வசதியை தொடங்கி வைத்து அதில் ஏறி சிறிது தூரம் பயணம் மேற்கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கருணாநிதி, கூத்தைப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், பேரூராட்சி செயலாளர் தங்கவேல் மற்றும் அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி, பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், துணை மேலாளர் சுரேஷ்குமார், துவாக்குடி நகர கிளை மேலாளர் ராஜேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நகர பேருந்து தினமும் காலை 7.40 மணிக்கு துவாக்குடியில் இருந்து புறப்பட்டு திருவெறும்பூர் வழியாக கூத்தைப்பார் வந்தடைகிறது. கூத்தைப்பாரில் இருந்து காலை 8-20 க்கு புறப்பட்டு திருவெறும்பூர், மார்க்கெட், பாலக்கரை வழியாக சத்திரம் பேருந்து நிலையத்தை சென்றடைகிறது. தினமும் இரண்டு முறை இந்த பேருந்து இயக்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்