போதைப் பொருள் விற்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10,000 பரிசு…* பாமக தேர்தல் அறிக்கையில் அதிரடி!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில் திமுக மற்றும் அதிமுக, த.வெ.க.சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 1) வெளியிட்டுள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கையை அன்புமணி வெளியிட்டுள்ளார். அதில், 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். பட்டப்படிப்பை முடித்து வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 வீதம் நிதியுதவி வழங்கப்படும். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். போதைப் பொருள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை, இதில் குறைந்தபட்சம் ரூ.900 மாநில அரசின் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்பன உட்பட மொத்தம் 717 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, ”திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பிரச்சினைதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில் மது, போதைப் பொருள் தடுப்பு பற்றி எதுவும் இடம்பெறவில்லை. பெண்களைக் கூட பாதுகாக்க முடியாத ஒருவர் எப்படி முதல்வராக இருக்கத் தகுதி உடையவர் ஆவார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று கூறினார்.

Comments are closed.