“மருத்துவம் பார்க்க விருப்பம் இல்லாவிட்டால் எழுதிக் கொடுத்துவிட்டு போய்விடுங்கள்”- அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நிபுணர் பணியிடங்களுக்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ள 332 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பணியில் சேரும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஓராண்டு ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும். விருப்பமின்றி மருத்துவர்கள் பணியாற்றுவதை விட எழுதிக் கொடுத்து விட்டு போய்விடலாம். அந்த இடத்திற்கு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் பேசினார்.
அரசு மருத்துவர்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை, பணியின்போது முழு ஈடுபாட்டுடன் இருப்பதில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அமைச்சர் இவ்வாறு பேசியதாக தெரிய வருகிறது.
அமைச்சரின் இந்த பேச்சு அரசு மருத்துவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.