ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று( மார்ச் 8) இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 52 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். இதில், 5 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். இஷான் கிஷான் தன் பங்குக்கு 25 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். கேப்டன் சூரியகுமார் யாதவ்(0) வந்த வேகத்திலேயே நடையை கட்டினார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ரன் வேட்டை சற்று தணிந்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. துபே 8 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். பின்னர், 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது. ஆனால், அந்த அணி 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.

Comments are closed.