Rock Fort Times
Online News

எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை…* திருச்சியில் திருமாவளவன் பேட்டி!

வி.சி.க.தலைவர் திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழ்நாடு அரசியல் கடந்த 60 ஆண்டுகளாக எவ்வாறு இயங்கி வருகிறது, அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்கிற என்னுடைய உரையில் எம்ஜிஆர் பற்றியும் குறிப்பிட்டேன். எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் எனக்கு அதீதமான மதிப்பு உண்டு. அவர்களை பலமுறை மனம் திறந்து பாராட்டியுள்ளேன். எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. மிகப்பெரிய கூட்டணி அமைக்க வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் ஆசையாகவும், அவருடைய முயற்சியாகவும் உள்ளது. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது என எந்த பொருளில் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். எம்.ஜி.ஆரை ஒரு சாதிக்குள் நான் சுருக்கவில்லை தவறாக அது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் அதிமுக இயங்கியது. அது கருணாநிதி எதிர்ப்பை மையப்படுத்தி இயங்கியதாக தான் நான் கூறினேன். எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் சாதி எல்லைகளை கடந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்