Rock Fort Times
Online News

“மன உளைச்சல் காரணமாக என்னால் பணி செய்ய இயலவில்லை”- விருப்ப ஓய்வு அளிக்குமாறு திருச்சி டிஎஸ்பி உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியதால் பரபரப்பு…!

திருச்சி மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வை.பரத் ஸ்ரீனிவாஸ். இவர் மன உளைச்சல் காரணமாக என்னால் பணி செய்ய இயலவில்லை. ஆகவே, எனக்கு விருப்ப ஓய்வு அளித்து உதவிடுமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக உள்துறை செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1997-ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தேன். படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவு 2-ல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறேன். என் குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக என்னால் தொடர்ந்து பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளதால் நான் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புகிறேன். அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதா? அல்லது அவருக்கு மேல் அதிகாரிகள் யாரும் டார்ச்சர் கொடுத்தார்களா? என்பது முழுமையாக தெரியவில்லை. அவரது இந்த முடிவு காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்