Rock Fort Times
Online News

நான் குற்றவாளி இல்லை: அந்த அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்… ஆனால், என்னால் வெளியே வரவே முடியவில்லை- * திருட்டு புகார் கூறிய நிகிதா…!

நகை திருட்டு வழக்கில் திருப்புவனம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமாரை விசாரித்த தனிப்படை போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நகை திருட்டுப்போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவர் பேராசிரியை நிகிதா. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் மிகப்பெரிய மோசடி பேர்வழி. இந்த வழக்கில் அவரையும் கைது செய்ய வேண்டும் என்று சில அரசியல் கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்தநிலையில் பேராசிரியை நிகிதா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் அவர், சக்தீஸ்வரன் என்னுடன் தான் இருந்தார். தாயாருக்கு அடிக்கடி மயக்கம் வரும்போது டீ எல்லாம் வாங்கி கொடுத்து ஆதரவாக இருந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நடந்ததை எழுதி கொடுக்க காத்து இருந்தோம். புகார் எழுதி கொடுத்துவிட்டு வந்துவிட்டோம். அதன்பிறகு நடந்த நிகழ்வுகள் எதுவும் எனக்கு தெரியாது. என்ன நடந்தது என்பது கூட தெரியாது. அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக நான் ஒன்றும் குற்றவாளி கிடையாது. அது கடவுளுக்கு தெரியும். எவ்வளவு பேர் என் மீது என்னென்னமோ வாரி இறைக்கிறீங்க. வயதான தாயாரை பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். என்னை பற்றி பேட்டி கொடுக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையை திரும்பி பார்த்தால், அவர்கள் எவ்வளவு பெரிய மோசமானவர்கள் என்பது தெரியும். அவர்களுக்கு மனசாட்சி இருந்தால்.

முதல்வர் மீது மரியாதையான எண்ணம் தான் உள்ளதே தவிர, தனிப்பட்ட முறையில் எதுவும் கிடையாது. அஜித்குமார் மரணம் அடைந்த பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுத்து வருகிறார். அப்பேர்பட்ட மனிதர், அஜித்குமார் தாயாரின் உணர்வை மதித்து ‘சாரி ‘ கேட்டார் என்றால், நான் அஜித்குமாரின் தாயாரிடம் பல முறை சாரி கேட்க வேண்டும். பல முறை மன்னிப்பு கேட்க வேண்டும். என்னால் நேரில் வர முடியவில்லை. கேமராக்கள் என்னை விடாமல் துரத்துகிறது. வீட்டு கதவை திறக்க முடியவில்லை. நானும், எனது அம்மாவும் தினமும் அழுது கொண்டிருகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில், ஐஏஎஸ் அதிகாரியை தெரியும். அவங்கள தெரியும், இவுங்கள தெரியும். போன் பண்ணியதாக சொல்கின்றனர். எனது தந்தை நேர்மையான அதிகாரி. நாங்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவையில் தான். பிரச்னைக்கு எல்லாம் காரணம், இவ்வளவு அசிங்கபடுத்துகிறது, மீடியாவில் வருவதற்கு ஆலம்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் சண்முகம் தான். வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கக்கூடாது என்பதற்காக முனைப்பாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அந்த ஆடியோவில் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்