தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்படை தலைவர் உத்தரவின்பேரில், திருச்சி மாநகரில் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்ட கவாத்து பயிற்சி மாநகர காவல் ஆணையர் காமினி மேற்பார்வையில் கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் ஆயுதப்படை காவலர்கள் சுமார் 730 பேர் கலந்து கொண்டு, திடீரென கலவரம் ஏற்பட்டால் அதனை தடுப்பது எப்படி?, கலவரத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என ஒத்திகையில் ஈடுபட்டனர் .
மேலும், கலவரக்காரர்கள் மீது தண்ணீரை பீச்சி கட்டுப்படுத்த உதவும் வருண் வாகனம், மற்றும் கண்ணீர்புகை குண்டுகளை வீசும் வஜ்ரா வாகனமும் பயன்படுத்தப்பட்டு தத்ரூபமாக நடத்தி காண்பிக்கப்பட்டது. ஒத்திகையின்போது காவல் துணை ஆணையர்கள், கூடுதல் துணை ஆணையர், (ஆயுதப்படை), உதவி ஆணையர்கள், வட்டாட்சியர், ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.