ரயில் விபத்து ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடுவது எப்படி?- திருச்சியில் பொதுமக்களை திகைக்க வைத்த ஒத்திகை…!(வீடியோ இணைப்பு)
எதிர்பாராத விதமாக ரயில் விபத்து ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடுவது எப்படி? என்பது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் திருச்சியில் இன்று(அக்.24) ஒத்திகை பார்க்கப்பட்டது.
இதற்காக திருச்சி ரெயில்வே குட்செட் யார்டு பகுதியில் ரயில் விபத்து ஏற்பட்டது போல ரயில் பெட்டிகள் கவிழ்ந்து கிடந்தன. உடனே மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர், போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபடுவது போலவும் ஒத்திகை பார்க்கப்பட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் பலர், ஏதோ ரயில் விபத்து தான் ஏற்பட்டுவிட்டது என எண்ணினர். அதன்பிறகு தான் இது ஒத்திகை என்பது தெரியவந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Comments are closed.