திருச்சி எடமலைப்பட்டிபுதூர், இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் (25). இவர், வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சிறையினுள் கஞ்சா பயன்பாடு இருப்பதாக சிறைத்துறை காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிறை காவலர்கள் கைதிகளை சோதனை செய்தனர். அப்போது முருகனிடம் 3 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது . அதை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறைதுறை அதிகாரி வெங்கடசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து சிறைக் கைதிக்கு கஞ்சா கிடைத்தது எப்படி?, அவரிடம் கஞ்சாவை கொடுத்தது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.