Rock Fort Times
Online News

இந்தியா கூட்டணியில் ஒற்றுமையே இல்லாதபோது எப்படி ஜெயிக்கப் போகிறார்கள்- திருச்சி பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் கேள்வி…!

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று(06-04-2024) நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொன் விழா கண்ட கட்சி. 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கட்சி. எம்.ஜி.ஆர்.க்கு பிடித்தமான ஊர் திருச்சி. இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்று ஸ்டாலின் சொல்லி வருகிறார். திமுக கூட்டணி முதன்மையாக இருப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இல்லாதபோது இவர்கள் எப்படி ஜெயிக்கப் போகிறார்கள். இவர்கள் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று இதுவரை தெரிவிக்கவில்லை.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்தியா கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போட்டியிடுகின்றனர். ஸ்டாலின் சேராமல் இருந்திருந்தால் இந்தியா கூட்டணி நன்றாக இருந்திருக்கும். இவர் போய் சேர்ந்ததால் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி வருகின்றனர். பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியது பொறுக்காமல் அதிமுக கள்ளக் கூட்டணி வைத்துள்ளது என்று விமர்சிக்கிறார். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அது ஒரு கட்சியே அல்ல. மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. எட்டப்பர்கள் நிறைய பேர் இருந்தார்கள் . சின்னத்தை முடக்க வேண்டும் என்று திமுகவோடு இணைந்து தொல்லை கொடுத்தார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. மூன்று ஆண்டு காலம் ஆட்சி செய்த உங்களால் 1 மருத்துவ கல்லூரியாவது கொண்டு வர முடிந்ததா?. ஊழல் செய்ததற்காக ராசா, கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.அதுவும் காங்கிரஸ் ஆட்சியிலேயே நடந்தது. இந்தியாவிலேயே பெரிய ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தான். தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி போன்ற திட்டங்களை திமுக அரசு முடக்கி விட்டது. ஆகவே, ஏழை, எளிய மக்களுக்கு துரோகம் செய்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்டுங்கள். திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவிற்கு மகத்தான வெற்றி தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், என்.ஆர்.சிவபதி, வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் ப.குமார், ஜெ.சீனிவாசன், பரஞ்ஜோதி, அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், நிர்வாகிகள் ஜாக்குலின், வனிதா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் பொன்.செல்வராஜ், மாநில பேரவை இணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் இப்ராம்ஷா, மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம், அன்பழகன், எம்.ஆர்.ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி, என்.எஸ்.பூபதி, சுரேஷ்குப்தா, ஏர்போரட் விஜி , கலைவாணன், ராஜேந்திரன், ரோஜர், தொழிற்சங்கம் ராஜேந்திரன், பாசறை இலியாஸ், பாலக்கரை சதர், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பாரதிதாசன், எஸ்.டி.பி.ஐ.கட்சி மாவட்ட செயலாளர் இஸான் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

🔴ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கைசிக ஏகாதசி 365 வஸ்த்திரங்கள் சாற்றப்படும் வைபவம்

1 of 939

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்