Rock Fort Times
Online News

திருச்சியில் பணிபுரியும் பெண்களுக்காக தங்கும் விடுதி..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்...

பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கான விடுதி தேவை தற்போது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கூடுவாஞ்சேரியில் 7 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருச்சியில் 5 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவிலும் 226 மகளிர் தங்கும் வகையில் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த 2 புதிய விடுதிக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று ( 13.07.2023 ) திறந்து வைத்தார். மேலும், அடையாறு, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் 458 மகளிர் தங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட 7 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். உடனடியாக பயன்பாட்டிற்கு வரும் இந்த விடுதிகளில் தங்குவதற்கு www.tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலம் பணிபுரியும் மகளிர் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சியில் இவ்விடுதி கட்டிடத்தை மாவட்ட ஆட்சியா் மா.பிரதிப்குமாா் ஐஏஎஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தாா். மேலும் இந்நிகழ்ச்சியில் மேயா் அன்பழகன், அதிகாாிகள் உடன் இருந்தனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்