மதுரையைச் சேர்ந்த கனகவேல் என்பவர் மனைவி கிருஷ்ணகுமாரி மற்றும் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பி கொண்டு இருந்தார்.
வழியில் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை நான்கு வழி சாலையை பாண்டி என்ற கொய்யாப்பழ வியாபாரி இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் மீது மோதிய கார் அருகில் இருந்த பேரிகார்டு மீதும் மோதியதுடன் அங்கிருந்த தடுப்புச் சுவரிலும் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்த கனகவேல் உள்ளிட்ட 4 பேரும், பாண்டியும் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 972
Comments are closed, but trackbacks and pingbacks are open.